சிறுவர்கள் ரசனை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல் – 2 – The Way Home

start: Sep 07, 2014 05:00PM
End: Sep 07, 2014 08:00PM

Venue: Sadhana Knoledge Park,367, 32nd Street, 6th Sector, K.K.Nagar, Chennai,

Description: சிறுவர்கள் ரசனை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல் – 2

நாள்: 07-09-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு.

இடம்: சாதனா நாலெட்ஜ் பார்க், பிளாட் நம்பர் 367, 32வது தெரு, 6வது செக்டார், கே.கே. நகர் தொடர்புக்கு: 7299855111 & 9840698236

திரையிடப்படும் படம்: The Way Home

நண்பர்களே, சிறுவர்களின் திரைப்பட ரசனையை வளர்க்கும் விதமாக தமிழ் ஸ்டுடியோ மற்றும் சாதனா நாலெட்ஜ் பார்க் இணைந்து நடத்தும், சிறுவர்களுக்கான திரைப்படங்கள் திரையிடல் நிகழ்வு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று சென்னை கே.கே. நகரில் நடைபெற்று வருகிறது. திரைப்படங்கள் வெறுமனே கேளிக்கைக்கான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதிலும், பிம்பங்களை தமிழ் சினிமா எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீரழித்திருக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் அகஉலகில் நுழைந்து அவர்களின் ஒட்டுமொத்த பிம்பங்கள் சார்ந்த சிந்தனையையும் தொலைகாட்சி உள்ளிட்ட இன்னபிற ஊடகங்கள் அழித்துவிட்டது. இந்த காலக்கட்டத்தில் குழந்தைகளின் திரைப்பட ரசனையையும், திரைப்படம் சார்ந்த புரிதலையும் வளர்க்க இந்த மாதிரியான திரையிடல் தேவைப்படுகிறது. நண்பர்கள் தவறாமல் தங்கள் குழந்தைகளையும், பக்கத்து வீட்டு குழந்தைகளையும், சொந்தக்காரர்களின் குழந்தைகளையும் சேர்த்து இந்த திரையிடலுக்கு அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறுவர்கள் திரைப்படம் பார்த்து சீரழிந்துப் போய்விடுவார்கள் என்கிற தவறான அணுகுமுறையை இதற்கு மேலும் உங்கள் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் குழந்தைகளை ஏற்கனவே தொலைகாட்சி பெட்டியும், தமிழ் சினிமாவும் சீரழித்து அவர்களின் அக உலகை நாசப்படுத்திவிட்டது. அதில் இருந்து மீட்டு அவர்களின் அக உலகையும், அவர்களுக்கான பிம்ப அறிவையும் கொடுப்பதே இந்த திரையிடலின் நோக்கம். ஒவ்வொரு மாதமும், முதல் ஞாயிறு மட்டுமாவது உங்கள் குழந்தைகளுக்கு தொலைகாட்சி பெட்டியிலிருந்து விடுதலை கொடுங்கள். அவர்களுக்கான உலகை அவர்களே கண்டடைவார்கள்.

அனைவரும் வருக… அனுமதி இலவசம்..

ஒருங்கிணைப்பு: தமிழ் ஸ்டுடியோ & சாதனா நாலெட்ஜ் பார்க்.
POSTS

Facebook event URL is https://www.facebook.com/events/1495142514059204
https://www.google.com/calendar/event?eid=ZjFxcTBlNG9lajBibjliZjA5ZnZlMXVxN28gNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw