இற்றைத் திங்கள்: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: தீர்ப்பும் அதற்கு அப்பாலும்

start: Oct 18, 2014 05:00PM
End: Oct 18, 2014 08:00PM

Venue: அகநாழிகை புத்தக உலகம், 390 அண்ணா சாலை, KTS வளாகம், (RG Stone மருத்துவமனை அருகில்), சைதாப்பேட்டை, சென்னை – 600 015.,

Description:

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: தீர்ப்பும் அதற்கு அப்பாலும்

சிறப்புரை: ஆர். மணி. சிறப்பு செய்தியாளர், இந்தியா டுடே.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்தது தொடர்பான வழக்கின் தீர்ப்பு, இன்றைய அரசியல் சூழலை வெகுவாக மாற்றியுள்ளது. பல கட்சிகளின் 2016 தேர்தல் வியூகத்தை அது மாற்றியுமுள்ளது. அதிமுகவின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகத்தின் நிகழ்காலத்தையும் அது சீர்குலைத்திருக்கிறது.

ஜெ சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இந்தியாவில் ஊழல் ஒழிப்பு செயல்பாடுகளில் மிக முக்கிய மைல்கல்லாகவும் விளங்குகிறது. நீதியரசர் குன்ஹாவின் தீர்ப்பை மேல் நீதிமன்றங்களால் அவ்வளவு சுலபமாக மறுதலித்துவிடமுடியாது. இதனால் ஜெயலலிதாவின் அண்மை எதிர்கால அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆகியுள்ளது என்பதே உண்மை.

இந்தச் சூழலை பயன்படுத்திக்கொள்ள இயலாத நிலையில் திமுக இருக்கிறது. பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிற முனைப்பில் பாஜக உள்ளது. பிற கட்சிகள் இதை கையலாகாத்தனத்துடன் கடந்துசெல்லக்கூடும். ஆனால் தமிழ்நாட்டில் தானாகவே காலூன்ற இதை மிகப்பெரிய சந்தர்ப்பமாக இந்துத்துவ சக்திகள் பார்க்கின்றன என்பது மிக முக்கியமான விஷயமாகும்.

கிட்டத்தட்ட எதிர்ப்பாராதத் திருப்பமாக அமைந்த இந்த அரசியல் கொந்தளிப்பில் கடந்த ஒரு மாதகாலமாக தமிழகம் திகைத்து நிற்கிறது.

ஜெவின் மீதான இந்த வழக்கை 18 ஆண்டுகாலமாக மிக உன்னிப்பாக கவனத்துவரும் செய்தியாளர் ஆர்,மணி (இந்தியா டுடே) இந்தத் தீர்ப்பையும் அதை அடுத்து நிகழ வாய்ப்புகள்ள அரசியல் மாற்றங்களையும் அலசுவதற்காக இந்தமாத இற்றைத் திங்கள் நிகழ்வில் கலந்துகொள்கிறார். ஆர். மணி இவ்விககாரம் தொடர்பாக அவரது பத்திரிகையிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் தெரிவித்துவரும் கருத்துகள் அவரது பல யூகங்களும் மதிப்பீடுகளும் சரியாக இருப்பதையே காட்டுகின்றன.

ஜெவின் எதி்ர்காலம், தமிழக அரசியலின் புதிய போக்குகள் ஆகியவற்றைப் பற்றிய அலசல்களினூடாக இன்றையச் சூழலின்மீது தீவிரமான விவாதங்களை எடுத்து ஆராய்ந்திட, இந்த வாரம் சனி்க்கிழமை அகநாழிகை புத்தக உலகத்தில் நடக்கவுள்ள இந்த நிகழ்வுக்கு வராமலிருந்துவிடாதீர்கள்.

Facebook event URL is https://www.facebook.com/events/1580000185555111

https://www.google.com/calendar/event?eid=NDJ2Y2c0MHNvbmpsMTdzdGkxZTA4bnNxaHMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw