புதுக்கவிதை முன்னோடிகள் தொடர் வரிசை – 1 கவிஞர் ந. பிச்சமூர்த்தி #Chennai #Poet

start: Oct 26, 2014 06:00PM
End: Oct 26, 2014 08:00PM

Venue: Panuval – Online Tamil BookStore, 112, First Floor, Thiruvalluvar Salai,Thiruvanmiyur, Chennai 600041

Description: https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xfa1/t31.0-8/1658160_1506584186272771_7336720614475720779_o.jpg

கவிஞர் ந. பிச்சமூர்த்தி

சிறப்புரை:
=========
பேரா . துரை சீனிச்சாமி

ஒருங்கிணைப்பு
==============
பேரா. கல்யாணராமன்

கவிஞர் ந. பிச்சமூர்த்தி பற்றிய குறிப்பு
==================================

தமிழில் வசனகவிதை முயற்சிகள் பாரதி, கு.ப.ரா, வல்லிக்கண்ணன் முதலியோரால் முன்னெடுக்கப்பட்டாலும், புதுக்கவிதை என்ற இயக்கத்தின் பிதாமகராக ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளே கருதப்படுகின்றன. 1960-களில் எழுத்து இதழில் வெளியான ந.பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக்கடை நாராயணன்’ கவிதை புதுக்கவிதை இயக்கத்திற்குத் தூண்டுதலான கவிதைகளாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ் மரபுக்கவிதை சுமந்த அசை,எதுகை,சீர்,அடி,தளை, மோனம் மற்றும் ஒலி அழுத்தங்களைத் துறந்து சுதந்திரக்கோலம் கொண்ட புதுக்குரல்களாக முதல் தலைமுறை புதுக்கவிஞர்கள் தோன்றினர். இந்தப் புதுக்குரல்களின் வெளிப்பாட்டுக்குத் தூண்டுதலாக இருந்தவர் ந.பிச்சமூர்த்தி.

“”எனக்கு எப்பொழுதும் உணர்ச்சிதான் முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாவது இடம்தான் தருவேன். ஆகையால் எப்பொழுதுமே ஒரு திட்டம் போட்டு குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான் எழுதவில்லை. உணர்வே என் குதிரையாகிவிட்டபடியால் நான் ஒரு சமயம் நட்சத்திர மண்டலத்தில் பொன்தூள் சிதறப் பறப்பேன். ஒரு சமயம் வெறும் கட்டாந்தரையில் “ஏபால்டில்” செய்வேன். என் மனதிலும் இந்த இரண்டு அம்சங்கள் பின்னிக்கிடப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஒரு பகுதி சிறகு விரித்து, சொல்லுக்கு எட்டாத அழகு ஒன்றை நாடி எப்பொழுதுமே பறந்து கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியின் ஆட்சிக்கு உட்பட்ட போதெல்லாம் வெறும் கற்பனையாகவே கதைகள் வருகின்றன. மற்றொரு பகுதி எல்லோரையும் போல் மண்ணில் உழலுகிறது. அப்பொழுதெல்லாம் உலகின் இன்ப துன்பங்களைப் பற்றி இயற்கையை ஒட்டிய முறையில் எழுதுகிறேன்” என்று கூறியவர் ந.பிச்சமூர்த்தி.

1900-ம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி கும்பகோணத்தில் பிறந்த ந.பிச்சமூர்த்தி, வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர். வக்கீல் தொழில் தனக்கு பொருந்தவில்லை என்று கருதி அதை விட்டுவிட்டார்.20 வயதுகளிலேயே சிறுகதைகளை எழுதத் தொடங்கியவர் 1933-ல் கலைமகள் பரிசுபோட்டியில் வென்ற ‘முள்ளும் ரோஜாவும்’ கதை வாயிலாகப் பிரபலம் ஆனார். பதினெட்டாம் பெருக்கு, வானம்பாடி முதலிய சிறுகதைகள் தமிழ் சிறுகதை மரபின் வளத்தைச் சொல்பவை. இவரின் எழுத்துக்கள் சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்வுக்கான தத்துவ உண்மைகளைக் காண முயன்றவர் பிச்சமூர்த்தி. அந்த முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்.

இவரது 75 கவிதைகளைத் தொகுத்து 1975-இல் எழுத்து பிரசுரம் வெளியீடாக சி.சு. செல்லப்பா வெளியிட்டார்

Facebook event URL is https://www.facebook.com/events/1569324353291473

https://www.google.com/calendar/event?eid=bDFvdjQzOGJrbTllMTNmdXFib2JzbGc2OWMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw