கலை விமர்சகர் தேனுகா – நினைவஞ்சலி , நவம்பர் 2, காலை 10 மணி, அகநாழிகை, சைதை, சென்னை

start: Nov 02, 2014 10:00AM
End: Nov 02, 2014 01:00PM

Venue: அகநாழிகை புத்தக உலகம், 390 அண்ணா சாலை, KTS வளாகம், (RG Stone மருத்துவமனை அருகில்), சைதாப்பேட்டை, சென்னை – 600 015.

Description: https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xap1/t31.0-8/10553715_1489019858045699_6844244686529326837_o.jpg

தேனுகா
கலை விமர்சகர், தமிழ் இலக்கிய ஆர்வலர்

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன ஓவியம், சிற்பம், இசை, புகைப்படம், கட்டடவியல், சித்திரக் கவிகள் எனக் கலைத் துறையின் பல்வேறு முனைகளில் உலகளாவிய பார்வையும், திறனான விமர்சன நோக்கும் கொண்டு செயல்பட்டவர் தேனுகா. நவீன ஓவியக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள், இசை, புகைப்படக் கலைஞர்கள், அவர்களின் பாணிகள், அவற்றின் நிறை – குறைகள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனிப்பவர். கலை உலகில் விமர்சகராக நன்கு அறியப்பெற்றவர்.

வண்ணங்கள் வடிவங்கள் (1987), வித்யாஷங்கர் ஸ்தபதியின் சிற்ப மொழி (1987), மைக்கேலேஞ்சலோ (1991), லியனார்டோ டாவின்சி (1991), புது சிற்பவியல் : பியாத் மாந்திரியானின் நியோபிளாஸ்டிசிஸம், ஓவியர் வான்கோ (1996), பழகத் தெரியவேணும் (1997) ஆகிய நூல்களைப் படைத்தவர்.

மாநில லலித கலா அகாதெமியின் கலைச்செம்மல் விருது, இந்திய அரசின் பெல்லோஷிப் விருது, சிறந்த தமிழறிஞருக்கான தமிழக அரசு விருது, ஸ்டேட் வங்கி இலக்கிய விருது உள்படப் பல விருதுகளும் பரிசுகளும் பெற்றவர். இவை அனைத்திற்கும் மேலாகப் பெரும் மரியாதைக்கு உரியவர். காரணம், அவருடைய நேர்மையும் செல்வாக்குகளுக்கு மயங்காத நடுநிலைமையுமே.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த தேனுகாவின் இயற்பெயர் எம்.சீனிவாசன். இசையின் மீது கொண்ட அதீத ஆர்வத்தின் காரணமாக தியாகராஜ சுவாமிகள் பாடிய ‘தெளியலேது ராமா’ என்ற பாடலின் இராகமான தேனுகா என்பதைத் தனது புனைப்பெயராக வைத்துக் கொண்டார். தேனுகா இராகம் கர்நாடக இசையின் ஒன்பதாவது மேளகர்த்தா ஆகும். கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்ற இவர் கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலையில் இசைக்குடும்பத்தில் பிறந்த இவர் நாகஸ்வர பயிற்சியும், இசைப் பயிற்சியும் பெற்றவர்.

Facebook event URL is https://www.facebook.com/events/1569983019899559

https://www.google.com/calendar/event?eid=MmRsNjdtcWU3Zm41dnRrZ3R0ZDF0cjc4aWsgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw