கோ.கேசவனின் திறனாய்வாளுமை – நூல் வெளியீட்டு விழா – வெளியீடுபவர்: நீதியரசர் கே.சந்துரு – நவம்பர் 1 மாலை 5.00 , த.இ.க.

start: Nov 01, 2014 05:00PM
End: Nov 01, 2014 08:30PM

Venue: தமிழ் இணைய கல்விக் கழகம். அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில், காந்தி மண்டபம் சாலை, கோட்டுர்புரம், சென்னை.600 025..

Description: https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/t31.0-8/10655359_733063060116039_2735678034908295496_o.jpg

பேராசிரியர் கோ.கேசவன்: தமிழக திறனாய்வு வரலாற்றில் சுடரும் துருவ விண்மீன்!
தோழர் கோ.கேசவன் காலமாகி 15 ஆண்டுகள் சென்று விட்டன. இன்றைக்கு கார்ப்பரேட் பன்னாட்டு கம்பெனிகளின் கொள்கை நலன்களுக்கான இந்துத்துவா பாசிசத்தின் நரேந்திர மோடி ஆட்சி டெல்லியில் நடைபெற்று வரும் சூழலில் போராசிரியர் கோ. கேசவனின் வாழ்கையை, படைப்புகளை நினைவு கூர்வதும், திறனாய்வதும் அவசியமானதொரு பணியாகின்றது.

நுகர்வு வெறியும், சுயநலமும், தன்னகங்காரம் உள்ள தமிழக அறிவு இன்று மேலோங்கி உள்ளது. தான தன்குடும்பம், தன் வாழ்வு என்று தாழ்ந்து தாழ்ந்து பிள்ளைப் பூச்சியாய் கசிந்து போவதான சூழலில் பரந்து விரிந்து மானுட வாழ்க்கை கண்ணேட்டத்துடன் தன்னை முக்கியப்படுத்க் கொண்டவர் தோழர் கோ.கேசவன்-

சிலரின் இறப்பு இறகை விட இலேசானது என்றும், சிலரது இறப்பு மலையை விட கனமானது என்றும் தோழர் மாவோ குறிப்பிடுவார். இந்தியச் சூழலில், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டுச் சூழலில் திரிபுவாத தற்கால நவீன திரிபுவாத சக்திகள், சீர்திருத்த இயக்கங்கள், ஓட்டுப் பொறுக்கும் திராவிட இயக்கங்கள் ஆகியவற்றின் துணையோடு இந்தத்துவம் பாசிச பரிவாரங்கள் அபரிமிதமாக வளர்ந்து வரும் நிலைமையில், ஏகாதிபத்திய சீரழித்தத்துவமான பின்நவீனத்துவம் தான் முற்போக்கானது என்று ஏமாற்றுவது முதற்கொண்டு திராவிட இயக்கமே மண்ணுகேற்ற மார்க்சியம் என்று பிழைப்பு நடத்துவது வரை உள்ள அறிவுச் சூழ்நிலையில் இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதலியல் ஆய்வு அடிப்படையில் பல்வேறு தளங்களில் 33 நூல்களையும், இன்னும் பல கட்டுரைகளையும் எழுதிய மார்க்சிய ஆய்வாளரும், நக்சல்பாரி இயக்கத் தோழருமான தோழர் கோ.கேசவன் அவர்களின் இழப்பை மேற்கண்டவாறு மதிப்பிடுவது மிகையானது அல்ல.

வரவேற்புரை: பேரா.திருமாவளவன்,
தலைமை: எழுத்தாளர் பா.ஜெயபிரகாசம்

வெளியீடுபவர்: நீதியரசர் கே.சந்துரு
பெறுபவர்: தோழர் ராதாபாய் அவர்கள்,
கருத்துரை:

பேரா.கோச்சடை,
பேரா. மணிகோ.பன்னீர் செல்வம்,
பேரா.கமலா கிருஷ்ணமூர்த்தி,
ஆசிரியர் தா.பாலு, (விழுப்புரம்)
எழுத்தாளர் கி.நடராசன்..
ஏற்புரை: ஜெ.கெங்காதரன்
நன்றியுரை: ஜெ.பா.தமிழ்

நாள்: 01-11-2014, சனிக்கிழமை, மாலை 5.00 மணி

இடம் : தமிழ் இணைய கல்விக் கழகம்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்,
காந்தி மண்டபம் சாலை, கோட்டுர்புரம்,
சென்னை.600 025..

அனைவரும் வருக! ஆதரவு தருக!!

இவண்
முரண்களரி இலக்கிய அறக்கட்டளை
98402408497, 94444 80549

Facebook event URL is https://www.facebook.com/events/748508928553625
https://www.google.com/calendar/event?eid=c241bXJyMW5vMHBzMzcwYTliNm4yN21iZWcgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw