வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா

start: Nov 09, 2014 05:00PM
End: Nov 09, 2014 09:00PM

Venue: Egmore Museum Theatre, Government Museum, Pantheon Road, Egmore, Chennai, India

Description:
வெண்முரசு: எழுத்தாளர் ஜெயமோகன் தமிழில் எழுதிவரும் மாபெரும் மகாபாரத மறுஆக்க நாவல் வரிசை. உலக இலக்கிய வரலாற்றிலேயே மிகப்பெரிய நாவல்.

தினமும் ஒரு அத்தியாயமென இணையத்தில் வெளிவரும் இந்நாவலின் முதல் நான்கு பாகங்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகியவற்றின் புத்தக வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை எழும்பூர் மியூசியம் தியேட்டரில், நவம்பர் 9 ஆம் தேதி, ஞாயிறு மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

நமது காலப் பெரும் இலக்கிய ஆளுமைகள் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், நாஞ்சில் நாடன் மற்றும் திரைத் துறைச் சாதனையாளர்கள் கமல்ஹாசன், இளையராஜா முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த அறிவிப்பினை தங்கள் நண்பர்களிடம், சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.

-விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

நாள் : நவம்பர் 9, 2014, ஞாயிற்றுக்கிழமை.
இடம் : சென்னை ம்யூசியம் தியேட்டர் அரங்கம்
நேரம் : மாலை 5 மணி

தொடர்புக்கு:
பாலா: m_bala_s@hotmail.com
#வெண்முரசு

https://www.google.com/calendar/event?eid=XzZ0MTRjaGExOGgyamdiOWw4NHIzNmI5azcwcjM0YmExODkya2FiYTM2aDFrMmRhNjZjbzM0Y2hpOG8gNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw