“சோழர் குறுஞ்சிற்பங்கள்” – உரை – அரவிந் வெங்கட்ராமன் – 12/12/14 – மாலை 4.30 மணி – தமிழ் இணையக் கல்விக்கழகம்

start: Dec 12, 2014 04:30PM
End: Dec 12, 2014 06:30PM

Venue: தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர் சென்னை- 600 025.

Description: தமிழ் இணையக் கல்விக்கழகம்
காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்
சென்னை- 600 025.

வழங்கும்

(இணையம் வழி தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்)
தொடர் சொற்பொழிவு-2

“சோழர் குறுஞ்சிற்பங்கள்”

என்னும் தலைப்பில்

திரு. அரவிந் வெங்கட்ராமன்
(மென்பொறியாளர்)

அவர்கள் உரையாற்றுகிறார்.

நாள் : 12.12.2014, வெள்ளிக்கிழமை, நேரம் : மாலை 4.30 மணி
இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்,

அனைவரும் வருக!

இயக்குநர்,
தமிழ் இணையக் கல்விக்கழகம்
தொ.பே: 22201012

உரையாளர் பற்றி:

திரு. அரவிந் வெங்கட்ராமன் அவர்கள் ஒரு மென்பொறியாளர். பல பன்னாட்டு நிறுவனங்களில் மிகப்பெரிய திட்டங்களில் ஒருங்கிணைப்பாளராக இருந்து வெற்றிகரமாக பணியாற்றியிருக்கிறார். பல்வேறு நிதித் துறை சார்ந்த மென்பொருள்களை இவர் வடிவமைத்துள்ளார். சிறு வயது முதல் பல தமிழக கோயில்களுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டதின் தாக்கமும், அவருடைய தாய்மாமன் சேகரித்த கடவுள்களின் புகைப்படங்களும், ஓவியங்களும் இவரின் கோயில் கலை மீதான ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் வளர்த்தது. இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு எடுத்த புகைப்படங்களை Poetryinstone.in என்ற வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால் இவரின் கலை ஆர்வம் மிக்க நண்பர்கள் வட்டம் பெருகி வருகிறது. பேரா சுவாமிநாதன் போன்றவர்களின் நட்பும், ஊக்குவிப்பும் அவரின் ஆர்வத்தை மேலும் வளர்த்தது. தமிழக கோயில்களின் கலை மற்றும் கட்டுமானம் பற்றிய ஆழமான விரிவான ஆவணத்தை உருவாக்குவதில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளார். அவரின் அனுபவங்களின் சாறாக இச்சொற்பொழிவு இருக்கும்.
https://www.google.com/calendar/event?eid=NTFibG5tdWRkaDhwZ3JnbzBmbWpjZGg2dXMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw