முதல் மொழிப்போர் தியாகி நடராசன் நினைவேந்தலும் மொழி உரிமைச் சூளுரை ஏற்பும் – ஜனவரி 15, 11-2, கிண்டி

start: Jan 15, 2015 11:00AM
End: Jan 15, 2015 02:00PM

Venue: மொழிப்போர் தியாகியர் மணிமண்டபம், காந்தி மண்டப வளாகம், கிண்டி, சென்னை,

Description:

1939 சனவரி 15 அன்று சிறையில் தன் இன்னுயிரை ஈந்து முக்கால் நூற்றாண்டு கழித்தும் இன்னமும் தமிழ்நாட்டில் மொழி உரிமைப் போராட்டத்தின் தீ அணையாமலிருக்கக் காரணமானவர் நடராசன். அவரது நினைவுக்கு அஞ்சலி செலுத்தவும் 1965 இந்தி்த் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் 50 ஆம் ஆண்டை மொழி உரிமை ஆண்டாகக் கடைப்பிடிக்கவும் 2015 சனவரி 15, வியாழன் காலை 11 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்திலிருக்கும் மொழிப்போர் தியாகியர் மணி மண்டபத்தில் ஒன்றுகூடுவோம். சூளுரை ஏற்போம்.

வாய்ப்புகள்ள எல்லாத் துறைகளிலும் இந்தியைத் திணித்தே ஆவது என்று களமிறங்கியுள்ள நரேந்திர மோடி அரசை துணிந்து எதிர்த்து நிற்கும் நேரம் எப்போதோ தொடங்கிவிட்டது. ஆனால் நாம் நமது போராட்டத்தைத்தான் தொடங்கவில்லை. தமிழக ஆட்சியாளர்களின் ஆங்கில நுகத்தடியின்கீ்ழ் சிக்கியுள்ள தமிழை மீ்ட்கவேண்டிய காலமும் எப்போதோ தொடங்கிவிட்டது.

அதனால்தான் தமிழகத்திலுள்ள தமிழ் அமைப்புகளும் முற்போக்கு, சனநாயக சக்திகளும் தமிழறிஞர்களும் மொழியுரிமைச் செயல்பாட்டாளர்களும் இணைந்து தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் கண்டிருக்கிறோம். இவ்வாண்டு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள், இயக்கங்கள், போராட்டங்களின் மூலம் மொழியுரிமைக்காக போராடவுள்ளோம்.

கூட்டியக்கத்தின் முதல் நிகழ்வாக மொழிப்போரின் முதல் தியாகி நடராசனாருக்கு நினைவேந்தல் செலுத்தும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு என்கிற வள்ளுவ வாசகத்துக்கு இந்தத் தைப்பொங்கல் நாளில் ஒரு மெய்யுரை எழுதுவோம். நடராசனின் நினைவை ஏந்துவோம்.

நடராசன் தொடங்கி இவ்வாண்டு தமிழகமெங்கும் பல மொழிப்போராட்டத் தியாகிகளின் நாட்கள் அங்கங்கே கொண்டாடப்படவுள்ளன.

தொடக்கத்திலிருந்து தொடங்குவோம் வாருங்கள். இது நமது உரிமைப் பொங்கல்.

Facebook event URL is https://www.facebook.com/events/409830449174853

https://www.google.com/calendar/event?eid=bWlmdjJ1YnZwNzZuM2FhcnNsZW84MHNrMGsgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw