1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் 50 ஆம் ஆண்டு நினைவேந்தல் – ஜனவரி 15, மாலை 3-6, மெரினா, சென்னை

start: Jan 25, 2015 03:00PM
End: Jan 25, 2015 06:00PM

Venue: மெரீனா கடற்கரை, கண்ணகி சிலை – திருவளளுவர் சிலை,

Description: https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10947254_10153528413179046_1582679684450931266_n.jpg?oh=5493a8ca6671b1da1a5e29523ac92384&oe=5566B47D&__gda__=1428237163_08308007b385587b051e5b4e31b310d3

1965 இல் தமிழகம் கண்ட மாபெரும் மக்கள் இயக்கமான இந்தித் திணிப்புக்கு எதிரான போரின் 50 ஆம் ஆண்டு நினைவை ஏந்துவோம்!

சனவரி 25, ஞாயிறு, மாலை 3 மணிக்கு மெரீனா கடற்கரையிலுள்ள கண்ணகி சிலை முதல் திருவள்ளுவர் சிலை வரை நினைவேந்தல் பேரணியை நடத்தி, முடியாத இந்த மொழிப்போரைத் தொடர உறுதியேற்போம்.

2015 ஐ மொழி உரிமை ஆண்டாக பறைசாற்றி, தமிழை இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்குவது உள்ளிட்ட அனைத்து மொழிக் கோரிக்கைகளுக்காகவும் புத்துணர்வுடன் போராடத்தொடங்குவோம்!

மொழியே அடையாளம், மொழியே அதிகாரம் என வரலாறு நிரூபித்த பின்பும், நம் கண் முன்னே தமிழுக்கு தொடர்ந்து நிலவும் தீங்குகளை வேரறுக்க, துரோகத்தை தூக்கியெறிய, ஒன்றுகூடுவோம்.

துப்பாக்கிகளால் சுடப்பட்டும் தீக்குளித்தும் நஞ்சருந்தியும் உயிர் ஈந்த தமிழர்களின் தியாகம் வீணாக போக விடமாட்டோம். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று தமிழர் தெருக்களில் களமாடிய மொழிப்போராளிகளின் நோக்கத்தை மீண்டும் நினைவில் ஏந்துவோம், போராடுவோம்.

மொழிப்போர் வீரர்களின், மொழிகாக்க உயிரிழந்த தமிழர்களின் நினைவை ஏந்த கடற்கரைக்கு வாருங்கள்.

ஆட்சித்துறைில், கல்வியில், நீதிமன்றத்தில், வணிகத்தில், தகவல் துறையில், வழிபாட்டு இடங்களில் என எல்லா இடங்களிலும் தமிழ் ஆள உறுதிசெய்வோம்.

சனவரி 25, மொழிப்போர் தியாகிகள் நாள் அன்று, மெரீனா கடற்கரையில் ஒன்றுகூடுவோம்.

மொழிப்போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி ஈட்டுவோம்.

– தமிழ மொழியுரிமைக் கூட்டியக்கம்

Facebook event URL is https://www.facebook.com/events/1534864130120120

https://www.google.com/calendar/event?eid=c2k1cHRpN3Y5cDNpNmk4dG8wZTBwcTd1cTggNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw