சாமிநாதம் நூல் அறிமுக விழா – பிப் 25, மாலை 5-9 , மாநிலக் கல்லூரி, சென்னை

start: Feb 25, 2015 05:30PM
End: Feb 25, 2015 08:30PM

Venue: Presidency College, Chennai (Madras), Kamarajar Salai, Chepauk, Chennai 600005

Description:

பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்னணியில் உருவான அச்சுச் சாதன வெளிப்பாட்டு வடிவங்களுள் ஒன்று புத்தகங்கள். தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறு குறித்த முழு விவாதத்திற்கு ஆவணமாகத் திகழ்பவை இவை. இந்த அச்சேறிய நூல்களின்வழி அறிவுத் தளத்தைப் பொதுவெளியில் பரப்புவதற்கு முயன்ற ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர் பழந்தமிழ் நூல் பதிப்பு முன்னோடிகளுள் ஒருவராகிய உ.வே.சாமிநாதையர் (1855 – 1942) அவர்கள்.

ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம் பிள்ளை, ’மனோன்மணீயம்’ சுந்தரம் பிள்ளை என மகத்தான சாதனையாளர்கள் வலம்வந்த நவீனத் தமிழ்ச் சூழலில் உ. வே. சா. என்னும் ஆளுமை உள் நுழைந்தபோது ஆரோக்கியமான அதிர்வுகளும் அடுத்தகட்டப் பாய்ச்சலும் தமிழ்ப் பதிப்புலகில் நிகழ்ந்தன. இவற்றை எல்லாம் அறிந்துகொள்வதற்கு நூல்களில் இடம்பெறும் அவரது முகவுரைகளே சான்று.

தமிழ் நெடும்பரப்பு முழுவதையும் பெரும் புலமையாளர்களிடமிருந்து கற்று, பதிப்பு நுட்பங்களை நவீனத்துவ வருகையினால் பெற்று, பண்பாட்டு விழுமியங்களை நுணுகித் தேடித் தமிழுக்கு அணி சேர்த்த நுண்மாண் நுழைபுலத்தை அவரது முகவுரைகள் வழியாகவே கண்டறிய இயலும்.

‘ஐயர் பதிப்பு’ என்னும் அடைமொழியோடு உ.வே.சா.வின் பதிப்பைக் கொண்டாடும் நாம் அந்தப் பதிப்புச் செம்மையை – படிநிலை மாற்றத்தைப் புரிந்துகொண்டு பதிப்புக் கோட்பாட்டை உருவாக்கவும் அதனூடே ஒரு ’மாதிரிப் பதிப்பை’ அமைக்கவும் பெரிதும் துணைபுரிவன இம்முன்னுரைகள்.

காலவெள்ளத்தில் கரையும் முன்னே அவரது 106 நூல்களிலிருந்து 130 முன்னுரைகளை அவர் வாழ்ந்த காலம்வரை வெளிவந்த பதிப்புகளிலிருந்து கண்டறிந்து முகப்பேடுகளுடன் முழுமையாகப் பதிப்பித்திருக்கிறார் ப. சரவணன்.

காலச்சுவடு- இலக்கியவீதி இணைந்து சாமிநாதம் நூல் அறிமுக விழாவை சென்னை மாநிலக் கல்லூரியில் இம்மாதம் 25 அன்று நடத்துகிறோம். நண்பர்கள் அனைவரும் வருக
Facebook event URL is https://www.facebook.com/events/890559264308825

https://www.google.com/calendar/event?eid=NHVlZGF1cnQyZGdwbXZuNTB1NDJocmxsMmcgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw