பசுமை சிற்றுலா ..நீர்தேக்கங்கள்-ஏரிகளில்..முதல் பசுமைநடை செம்பரம்பாக்கம் ஏரி – மார்ச் 1, 2-6 மாலை

start: Mar 01, 2015 02:00PM
End: Mar 01, 2015 06:00PM

Venue: வழக்கறிஞர் நடராசன் இல்லம், தெற்கு மலையம்பாக்கம், சர்ச் ரோடு,

Description: https://www.facebook.com/events/1394552374189850

பசுமை சிற்றுலா ..நீர்தேக்கங்கள்-ஏரிகளில்..முதல் பசுமைநடை செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில்..

தமிழ்நாட்டின், தமிழக மக்களின், நமது முன்னோர்களின் பெருமைகள், பாரம்பரியம் என்பது கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்பதல்ல..

மனித நாகரிக வளர்ச்சிக்கான அவசியமான சூழல் கட்டமைப்புகள், நுண்ணிய பொறியமைப்புகளை தங்கள் உழைப்பு திறனால், அறிவு நுட்பத்தால் கண்டறிந்ததுதான்.. மருத்துவம், கட்டிடம், விவசாயம், கால்நடை..என்று பலப்பல அறிவார்ந்த நுண்ணிய பொறியமைப்புகள்.. , நமது முன்னோர்களின் மகத்தான பங்களிப்புகள்.

இதில் முக்கியமானது ஏரிகள், அதன் இணைப்பு கால்வாய்கள், வடிகால்கள், நீர்நிலைகளின் ஒருங்கிணைந்த பொறியமைப்புகள் ஆகும். வற்றாத ஆறுகள் ஏதும் பாயாத தமிழ்நாட்டில் நிலவியல் வடிமைப்பை ஆராய்ந்து பயன்படுத்தி நீரை தோக்கி வைக்கும் சிறப்பான ஏரி அமைப்பை 2000 ஆண்டுகளாக படிப்படியாக உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள். ஆகவே, மனித உழைப்பின், நமது முன்னோர்களின் மாண்புறு படைப்புகளில் மகத்தானது அவர்கள் உருவாக்கிய ஏரிகளும் குளங்களும் ஆகும்..

அதனினும் மகத்தானது அவர்கள் இயற்கையை மனிதநேயமாக்கியது. செயற்கையான குளங்களை இயற்கையான ஆறுகளுடன், இணைத்த நல்வினைப் பயன்தான் இன்று நாம் பயன்படுத்தும் நீர். பல நூறு ஆண்டுகளாகப் பெற்ற அறிவின்,உழைப்ப்பின் கூட்டுப் பலன் இது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் நாற்பது ஆயிரம் பாசனக் குளங்கள் இருப்பதாகவும், இதைப்போல ஐந்து முதல் பத்து மடங்கு எண்ணிக்கையிலான சிறிய குளங்கள், ஊரணிகள், குட்டைகள் இருக்கின்றனவென்றும் புள்ளிவிபரங்களும் மதிப்பீடுகளும் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள மிகப் பெரும் ஏரிகள் காலத்தால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, 3 மில்லியன் கன மீட்டருக்கு மேல் கொள்ளளவு கொண்ட ஏரிகள் மொத்தம் 116 ஆகும் இவற்றில் 6 ஏரிகள் மட்டுமே கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் கட்டப்பட்டவை. மீதியுள்ள 110 ஏரிகள் அதற்கும் வெகு காலத்திற்கும் முன்பே கட்டப்பட்டவை..

நீரின்றி அமையாது உலகு… என்பார் திருவள்ளுவர். தமிழக நீர்நிலைகளை, வரலாற்றை புரிந்து கொள்வதும் அவை உருவாக்கிய இயற்க்கை உயிர்ச்சூழலை உணர்ந்து கொள்வதற்க்கும்தான் இந்த சிற்றுலா.(பசுமை நடை)

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி… இந்த தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியில் முதல் சிற்றுலா… இது தொடரும்..தொடருவோம்.. ஒவ்வொரு ஊர்தோரும் கிராமங்கள்தோரும் அனைவரும் தொடங்குவோம். நீர்நிலைகளை தேவையை உணர்ந்து பாதுகாப்போம்!!

செம்பரபாக்கம்ஏரி சென்னையில் இருந்துசுமார் 40 கி.மீ. தொலைவில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரியாகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் ( இன்றைய திருபெருமந்தூர் மாவட்ட்டம் + திருவள்ளுர் மாவட்டம்) மட்டும் 653 ஏரிகள் இருக்கின்றன்..இல்லை..இருந்தன. இதன் மூலம் 4,50,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. இன்று சென்னை நகரின் பிரதான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான இந்த ஏரியில் இருந்துதான் அடையாறு நதி பிறக்கின்றது. இந்தஏரியின்மொத்த கொள்ளளவு 364.5 கோடி கனஅடி (3645 mcft) ஆகும்.செம்பரம்பாக்கம்ஏரியின்பரப்பளவு 13 ஆயிரம் ஏக்கர்..

12ஆம் நூற்றாண்டை சேர்ந்த பெரியபுராணம் என்ற நூலை எழுதிய சேக்கிழார் குன்றத்தூரைச் பிறந்து வாழ்ந்தவர்.. இருப்பினும் செம்பரம்பாக்கம் ஏரியை பற்றிய வரலாற்று குறிப்புகள் ஏதும் பெரியபுராணத்தில் இருப்பதாக தெரியவில்லை.. ஆனால் சேக்கிழாருக்குப் பின் வந்த 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் எழுதிய சேக்கிழார் புராணம் எனும்“திருத்தொண்டர் புராண வரலாறு” என்ற பாடல் நூலில் குன்றத்தூரில் பாலாறு பாய்ந்து வளம் சேர்த்த வரலாற்று தகவல் உள்ளது.

அந்த பாடல்:
“பாலாறு வளம்சுரந்து நல்க மல்கும்
பாளை விரி மணம்கமழ்பூஞ் சோலைதோறும்
காலாறு கோவியிசை பாட நீடு
களிமயில்நின்று ஆடுமியல்தொண்டைநாட்டு
நாலாறு கோட்டத்துப் புலியூரக் கோட்ட
நன்றிபுனை குன்றைவள நாட்டுமிக்க
சேலாறு கின்றவயல் குன்றத் தூரில்
சேக்கிழார் திருமரபு சிறந்ததன்றே!”
அதாவது பாலாறு நீரினால் வளம்சுரந்து
வயல்கள் செழித்த குன்றத்தூர்”
என்கின்றது..

பாலாற்று நீர் இணைப்பு கால்வாய்கள் மூலம் திருபெருமந்தூர் ஏரி, செம்பரம்பாக்கம்ம் ஏரி, பூண்டி ஏரி , பள்ளிக்கரணை சதுப்புநிலம் வரை பாலாறு வடிகால் இணைக்கப்பட்டுள்ளன.
குன்றத்தூரை சுற்றி உள்ள கிராமங்களுக்கு விவசாயம் செய்ய பாலாற்றுநீர் கொண்டுவரப்பட்டு உள்ளது.

இப்பொழுதும் திருபெரும்ந்தூர் ஏரி பாலாற்றுடன் பாங்காங் கால்வாய் மூலம்
இணைக்கப்பட்டுள்ளது. திருபெரும்ந்தூர் ஏரி உபரி நீர் சவுத்திரி கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கும்..இடையில் உள்ள சோமங்கலம் ஏரி, வெங்காடு ஏரி, அமரம்பேடு வருகின்றது… ஆனால் பாலாற்று நீர்தான் வரவில்லை.
மேலும் பாலாறு, கூவம் ஆறு, கொசத்தலை ஆறு,
பூண்டி ஏரி, புழல் ஏரி அனைத்தும் இணைப்புக்கால்வாய்கள் மூலம் நமது முன்னோர்களால் இணைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டது. குடிமராமத்து முறை இந்த நீர்நிலைகளை தூர்வாரி உயிர்ப்புடன் பலநூற்றாண்டுகளாக பராமரிக்கப்பட்டு உழவு, குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்தத்து..

நாள்: 01-03-2015 ஞயிறு மதியம் 2.30 மணிக்கு…

கூடும் இடம்: வழக்கறிஞர் நடராசன் இல்லம், தெற்கு மலையம்பாக்கம், சர்ச் ரோடு,

(குன்றத்தூரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர்கள். உள்ளது எனவே. இருசக்கர வாகனம் அவசியம்…)

2.00 P.M:புதிய தலைமுறையில் ரவுத்திரம் பழகு நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பான ஏரிகள் மாசுபடுதல் பற்றிய ஆவணப்படம், ஏரிகளில் எடுக்கப்பட்ட சில ஓளிப்படங்கள் , திரையிடப்படும்.

3.30க்கு சிற்றுரை-கலந்துரையாடல் …

தொல்லியல் ஆய்வாளர் முனைவர் தோழர் பத்மாவதி அவர்கள்,

காடு இதழ் ஆசிரியர் சண்முகம் அவர்கள்

4.00 மணிக்கு தேநீர்..
அங்கிருந்து செம்பரம்பாக்கம் ஏரி கலங்கல் வரை – அடையாறு உற்பத்தியாகும் இடம் வரை நடைபயணம்.

4.30 மணிக்குபின் வருபவர்கள் நேரிடையாக செம்பரம்பாக்கம் ஏரி பெரிய மதகு வரவும்..

அனைவரும் வாருங்கள்…குழைந்தைகளுடன் வாருங்கள்! இயற்கை நேசிக்க பழகுவோம்!!

செல்பேசி: 9840855078
https://www.google.com/calendar/event?eid=NWZ1cDhsZGZkc2NzZmR0amw2M2NodWF2bnMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw