இற்றைத் திங்கள்: சிறிய/புதிய தேர்தல் கட்சிகளுக்கு எதிர்காலம் உண்டா? – மார்ச் 7, 5-7 மாலை, அகநாழிகை

start: Mar 07, 2015 05:30PM
End: Mar 07, 2015 08:00PM

Venue: அகநாழிகை புத்தக உலகம், 390 அண்ணா சாலை, KTS வளாகம், (RG Stone மருத்துவமனை அருகில்), சைதாப்பேட்டை, சென்னை – 600 015.

Description: https://www.facebook.com/events/1459989967556705

இந்த மாதம் இற்றைத் திங்கள் நிகழ்வு

நிகழ்ச்சி நிரல்

தேர்தல் ஆணையமும் பெரிய கட்சிகளும் இணைந்து ஆளும் இன்றைய தேர்தல் களத்தில் சிறிய/புதிய மாற்று அரசியல் கட்சிகளுக்கு எதிர்காலம் உண்டா? என்ன செய்யவேண்டும்?

சிறப்புப் பேச்சாளர்கள்

திரு கெளதம சன்னா
கொள்கைப் பரப்புச் செயலர், விடுதலைச் சிறுத்தைகள்

திரு ஆர். முத்துக்குமார்
எழுத்தாளர், அரசியல் விமர்சகர்

திரு ரவீந்திரன் துரைசாமி
அரசியல் விமர்சகர்

வணக்கம் நண்பர்களே,

புது தில்லியி்ல் ஆம் ஆத்மியும் திருவரங்கத்தில் அஇஅதிமுகவும் பெற்ற வெற்றிகள் இரு வேறு அனுபவங்களையும் படிப்பினைகளையும் நமக்குத் தந்திருக்கின்றன.

போராட்ட அரசியல் செயல்பாட்டாளர்களில் பலர் அடுத்த கட்டமாக தேர்தலில் நின்று மக்கள் விரோதிகளை் தோற்கடிப்பது குறித்தும், தேர்தல் முறையை தமது இறுதி இலக்குக்காக பயன்படுத்துவது குறித்தும் முன்பு எப்போதையும்விட அதிகமாக சிந்திக்கும் காலம் இது.

அதே சமயம் இந்த தேர்தல் முறையில் ஒரு அணுவளவேனும் நாம் சாதித்துவிடமுடியாது, எனவே இது போராட்ட அரசியலை பலவீனப்படுத்தும் என்று மாற்றுக் கருத்துகள் நிலவும் காலமும்கூட.

பெருவாரியான மக்களின் அரசியல் ஆதரவை நேரடியாக பெறுகிற தேர்தல் பங்கேற்பு நடைமுறை இன்று தேவை என்று கூறுபவர்கள்கூடஇப்போதையே தேர்தல் வியூகம், கலாச்சாரம், நிலைமை குறித்து நம்பிக்கை இழந்தே இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம், பெரிய கட்சிகள், வாக்காளர்கள் என மூன்று தரப்பினருமே சிறிய, புதிய கட்சிகளுக்கு சவாலாக இருக்கின்றனர். இந்நிலையில் மாற்று அரசியலை மையநீரோட்ட அரசியலாக மாற்ற விரும்புகிற கட்சிகள் தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது? அவர்கள் சந்திக்கும் சவால்கள்தான் என்ன? பண பலமும் படைபலமும் சாதி, மத வலிமைகளும் கூடிய பெரிய கட்சிகளை நம்மால் ஏதுமே செய்துவிடமுடியாதா என பல கேள்விகள் எழுகின்றன.

இவற்றுக்கான விடைதேடும் முயற்சிகளில் ஒன்றுதான் மார்ச் 7, 2015 இல் நடக்கவுள்ள இற்றைத் திங்கள் நிகழ்வு.

நீங்கள் தேர்தல் பங்கேற்பை ஆதரிக்கிறீர்களோ இல்லையோ, இந்த நிகழ்வில் பங்கேற்பதன் மூலம் அந்த பிரச்சினையை மேலும் ஆழமாக புரிந்துகொளள இயலும் என நம்புகிறோம்.

வாருங்கள்.

தோழமையுடன்
ஆழி செந்தில்நாதன்
இற்றைத் திங்கள்
9884155289

வாருங்கள்.
https://www.google.com/calendar/event?eid=cXVlc3F1NjR2aWl1Ym50azV2M2lka2dya2MgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw