”உப்பு வேலி” நூல் வெளியீடு – ஆங்கில எழுத்தாளர் ராய் மாக்ஸம் உரை, மார்ச் 15, சென்னை

start: Mar 15, 2015 05:30PM
End: Mar 15, 2015 08:00PM

Venue: Kaviko Mandram, #6, C.I.T.Colony, 2nd Main Rd, CIT Colony, Mylapore, Chennai, Tamil Nadu 600004

Description: https://www.facebook.com/events/1547470225524237

லண்டனில் வசிக்கும் எழுத்தாளர் ராய் மாக்ஸம், தெருவோர பழைய புத்தகக்கடை ஒன்றில் வாங்கிய ”ஒரு சுங்க அதிகாரியின் புலம்பல்கள்” என்ற நூலில் இந்தியாவின் குறுக்கே சுமார் 2000 மைல் தொலைவிற்கு, நீண்ட உயிருள்ள முள்புதர் வேலி ஒன்றை கிழக்கிந்திய கம்பனி உருவாக்கி வளர்த்து, கடுமையான காவலுடன், சட்டதிட்டங்களின் உதவியுடன் பேணியுள்ளது பற்றிய சிறு குறிப்பைக் கண்டார்.

ஆனால் இந்திய வரலாற்றீலோ, இந்திய மக்களுக்கோ இது குறித்து ஒன்றும் தெரியவில்லை என ஆச்சரியமடைந்து அதைக் குறித்து மேலும் அறிய லண்டனின் பிரிட்டிஷ் இந்திய ஆவணங்கள் அனைத்தையும் பலவருடங்கள் ஆய்வு செய்து, இரனூறு வருடங்கள் பழைய அரிடாகக் கிடைத்த சில அரைகுறை வரைபடங்களுடன் தொடர்ந்து இந்தியாவில் பயணம் செய்து, விடாமுயற்சியுடன் 3 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றின் எச்சங்களாக இருக்கும் அந்த முள்வேலியைக் கண்டறிந்தார்.

முடிவில், ராய் மாக்ஸம், தன் தேடலின் கதையையும், சுவாரசியமான தனது பயண அனுபவங்களையும், இந்திய வரலாற்றில் எங்கும் குறிப்பிடப்படாத இந்த முள்வேலியின் கதையையும், கிழக்கிந்திய கம்பெனியின் பேராசையால் திட்டமிட்ட பஞ்சங்களால் கொத்துக் கொத்தாக மக்கள் பட்டினியில் மடிந்ததையும் பிரிட்டிஷ் அரசின் ஆவணங்களில் இருந்தே பெறப்பட்ட தரவுகளுடன் சேர்த்து “The Great Hedge of India” என்ற நூலாக எழுதி வெளியிட்டார்.

இந்திய வரலாற்றின் அறியாத பக்கங்களை வெளிக்காட்டும் இந்த நூல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த சென்னைவாழ் மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸ் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, ’எழுத்து’ பதிப்பகத்தால் வெளியிடுகிறது.

நூல் வெளியீட்டு விழாவை விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒருங்கிணைக்கித்து நடத்த உள்ளது. விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் யுவன் சந்திரசேகர், வரலாற்றாய்வளர் எஸ்.ராமச்சந்திரன் அவர்களும் உரையாற்ற உள்ளார்கள். ராய் மாக்சம் நூலை வெளியிட்டு பேருரையாற்ற உள்ளார்.

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
https://www.google.com/calendar/event?eid=OGpnbDE4b2oyN2RqNXRyOW5xcTlocWlmZWsgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw