#தண்ணீர் தேவை – நீர்நிலைகள் பாதுகாப்பு – விழிப்புணர்வு பேரணி – மார்ச் 23, 10-12, மெரினா, #சென்னை

start: Mar 22, 2015 10:00AM
End: Mar 22, 2015 12:00PM

Venue: சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை முதல் கலங்கரைவிளக்கம் வரை

Description: இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் வணக்கம், தமிழக வரலாற்றில் கடந்த 15-20 வருடங்களுக்கு முன்வரை தண்ணீரை விலைகொடுத்து வாங்கிய அவலம் நேர்ந்ததாக தெரியவில்லை.

ஆனால் இன்று தண்ணீரை விலைகொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். தற்போது குடிநீருக்கு ஏற்பட்ட இந்த நிலை வரும்காலங்களில் பத்திரம் கழுவ, துணி துவைக்க என எல்லாவற்றுக்கும் தண்ணீரை வாங்கும் நிலையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

நமது முன்னோர்கள் தண்ணீரை சேமிக்க ஏரிகள்,குளங்கள் போன்றவற்றை தீர்மானித்து, கால்வாய்கள் மூலம் ஆறுகளிலிருந்து தண்ணீரை கொண்டு சேர்த்தனர். ஆனால் இன்று நாம் ஆறுகள் மற்றும் ஏரிகளை சாக்கடை நீரால் நிரப்பி, நிலத்தடி நீரின் தன்மையை மாற்றியதுடன், தண்ணீருக்காக பிற மாநிலங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
இந்த நிலை தொடர்தால் நமது நீர்நிலைகள் அனைத்தும் சாக்கடை நீரால் நிரம்பிவிடும். நல்ல மழை பெய்தாலும் அதை தேக்கிவைத்து பயன்படுத்த நம்மிடம் வசதிகள் இருக்காது.

இந்த நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நமது நீர்நிலைகளை பாதுகாப்பதன் முக்கியதுவத்தை வலியுறுத்தவும் உலக தண்ணீர் தினமான, மார்ச் 22, 2015 அன்று காலை 10 மணிக்கு மாசுபடாத கூவம் ஆறு பாதுகாப்பு குழு சார்பாக சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை முதல் கலங்கரைவிளக்கம் வரை நடைபெறவிருக்கும் விழிப்புணர்வு பேரணியை, மதுரை மாநகரின் முன்னால் காவல் ஆணையர் திரு.K. நந்தபாலன் IPS, அவர்கள் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

பேரணியின் போது, சென்னை நகரின் குடிநீர் பிரச்னையை போக்க இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில் ஒரு கையேட்டையும் வெளியட உள்ளோம். இந்த பேரணியில் தாங்கள் கலந்துகொள்வதன்மூலம், இந்த கோரிக்கையின் நியாயத்தை அனைவருக்கும் உணர்த்துவோம், நமது வருங்கால சந்ததியினருக்காக நமது நீர்நிலைகளை சாக்கடை நீரிலிருந்து காப்போம்.

இன்று நீங்கள் விலைகொடுத்து வாங்கிய நீரை பருகினால் இந்த தகவலை தங்கள் சென்னை நண்பர்களிடம் பகிருங்கள், பேரணியில் கலந்துகொள்ளுங்கள், நன்றி – மாசுபடாத கூவம் ஆறு பாதுகாப்பு குழு, அனைக்கட்டுச்சேரி, சென்னை-600072.
https://www.google.com/calendar/event?eid=cTRhcjZyOWhpYmM2ZTJhMzk3ZDA3N2dtNmsgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw