உலக புத்தக தினம் – சொற்பொழிவு – சா. கந்தசாமி – ஏப்ரல் 23, மாலை 5-8, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சென்னை

start: Apr 23, 2015 05:00PM
End: Apr 23, 2015 08:00PM

Venue: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 3ஆவது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை 600 113

Description: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
பேரா. மு. ஆனந்தகிருஷ்ணன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

பொருள்
புத்தகம்

உரையாற்றுபவர்
திரு. சா. கந்தசாமி
(எழுத்தாளர்)

தேதி: 23 ஏப்ரல் 2015
நேரம்: மாலை 5.00 மணி

இடம்:

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
3ஆவது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
தரமணி, சென்னை 600 113
தொலைபேசி: 2254 2551/2254 2552

(தேநீர்: மாலை 4.30 மணி)

சொற்பொழிவு
உலக புத்தக தினத்தை முன்னிட்டு இச்சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சா. கந்தசாமி
மயிலாடுதுறையில் பிறந்த திரு. சா. கந்தசாமி அவர்கள் 1968ல் எழுதிய ‘சாயாவனம்’ என்ற நாவல் மூலமாக நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். இவர் தமிழ் இலக்கியத்தில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய ‘கசடதபற’ பத்திரிகையை தோற்றுவித்தவர்களில் ஒருவர். 1998ல் விசாரணைக் கமிஷன் என்ற புதினத்திற்காக இவருக்குத் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. இவர் எழுதிய ‘நிகழ் காலத்திற்கு முன்பு’ எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இவர் நவீன தமிழிலக்கியத்தில் வெளிவந்துள்ள சிறந்த சிறுகதைகளை தொகுத்து ‘சிறந்த சிறுகதைகள்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். சூரிய வம்சம், வேலையற்றவன் போன்ற நாவல்களை எழுதிய இவர் சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து எழுதி வருகிறார்.

https://www.google.com/calendar/event?eid=Zjk5ZXBncDY4MG0xMDNkMjBvYmN0MnVpNDAgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw