பழந்தமிழ் பண்பாட்டின் சேரநாட்டு எச்சங்கள் – உரை – ஜெயமோகன் – மே 2, மாலை 5.3- தி.நகர்

start: May 02, 2015 01:00PM
End: May 02, 2015 04:00PM

Venue: Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.

Description: தமிழ்ப் பாரம்பரியம்

(Tamil Heritage Trust)

presents

பழந்தமிழ் பண்பாட்டின் சேரநாட்டு எச்சங்கள்

(Remnants of Early Tamil Culture in the Chera Country)
by

ஜெயமோகன்

(Jeyamohan)
at 5.30pm on Saturday, May 2nd, 2015
at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.

தலைப்பு பற்றி:

குமரி மாவட்டம் பழைய சேரநாடு. இங்கு தொன்மையான தமிழ் நாகரிகத்தின் பண்பாட்டு நீட்சி இப்போதும் ஓரளவு இருக்கிறது. இவற்றை விழாக்களில். ஆலயச்சடங்குகளில் நாம் காணலாம். பிற தமிழ்ப் பகுதிகளில் வெவ்வேறு பிற்கால ஆட்சியாளர்களாலும் தொடர்குடியேற்றங்களாலும் நிகழ்ந்த பண்பாட்டுமாற்றம் குமரிப் பகுதியில் நிகழவில்லை. ஆகவே இது ஆய்வாளார்களுக்குரிய ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது என்று கூறலாம். இந்தப் பண்பாட்டு எச்சங்கள் குறித்த ஓர் அறிமுகப் பார்வையை ஜெயமோகன் அளிப்பார்.

ஜெயமோகன் பற்றி:

பிறந்தது 1962, ஏப்ரல் 22ல். பள்ளி நாள்களில் ரத்னபாலா என்கிற சிறுவர் இதழில் முதல் கதையை எழுதினார். 1987-ல் கணையாழியில் எழுதிய ‘நதி’ சிறுகதை பரவலாகக் கவனம் பெற்றது. 1988-ல் எழுதப்பட்ட ‘ரப்பர்’ நாவல் அகிலன் நினைவுப்-போட்டியின் பரிசைப் பெற்றது. இது தவிர கதா விருதும் சம்ஸ்கிருதி சம்மான் தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் எழுதிய விஷ்ணுபுரம் தமிழ் இலக்கிய உலகில் பெரிய கவனத்தைப் பெற்றதோடு விவாதத்தையும் ஏற்படுத்தியது. இவரது படைப்புகள் தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகில் அதிர்வலைகளையும் புதிய சாத்தியங்களையும் ஏற்படுத்தியவண்ணம் உள்ளன. தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படத் துறைகளிலும் இவரது பங்களிப்பு தொடர்கிறது. தற்போது மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் தொடர் நாவல்களாக மறு ஆக்கம் செய்துவருகிறார்.

அனைவரும் வரலாம்.
தொடர்பு கொள்ள:
சுவாமிநாதன் – sswami99@gmail.com; 2467 1501
பத்ரி சேஷாத்ரி – கிழக்குப் பதிப்பகம் – badri@nhm.in; 98840-66566
அண்ணாமலை – காந்தி நிலையம் – gandhicentre@gmail.com;
கண்ணன் – musickannan@gmail.com; 98414-47974
கோபு – writergopu@yahoo.com, 98417-24641
சிவசுப்ரமணியன் – siva.durasoft@gmail.com, 98842-94494
https://www.google.com/calendar/event?eid=Y2RqNmNwMzQ2dGdqOGI5aTY4cGplYjlrYzlqMzZiOW82NHI2Y2I5bGNoaTMwY2o0NmxpajBlOWxjNCA2cHBrZjkyc3Azb25lMGk3YWw3aW5rYWhtOEBn