புதிய தமிழ் ஆய்வுகள் – ஐந்தாம் அமர்வு -தமிழகத்தில் ஊடகங்களின் நிலை, 19/03, 5.30-8 pm பனுவல் அரங்கு, திருவான்மியூர்

start: Mar 19, 2016 05:30PM
End: Mar 19, 2016 08:00PM

Venue: Panuval BookStore, 112, First Floor, Thiruvalluvar Salai,Thiruvanmiyur, Chennai 600041

Description: நாள்: 19-03-2016 சனிக்கிழமை மாலை 5.30 இடம்: பனுவல் அரங்கு, திருவான்மியூர்.

Live stream: https://www.youtube.com/watch?v=5qqyVyJqPI4

ஆய்வுரை வழங்குபவர்: பத்திரிகையாளர் திரு. பாபு ஜெயக்குமார்.

ஆய்வுப் பொருள்: தமிழகத்தில் ஊடகங்களின் நிலை.

ஆய்வுரைச் சுருக்கம்:
===============
நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருப்பெற்றுள்ள தேமுதிக -வின் தலைவர் விஜயகாந்த், சில மாதங்களுக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் மீது காறி உமிழ்ந்தபோது, அவரது நாகரீகமற்ற அச்செயலை, சாதாரண மக்கள் எவரும் கண்டிக்கத்தக்கதாகக் கருதவில்லை. சொல்லப்போனால், சமூக வலைத்தளங்களில் பலர் அவரது செயலை ஆதரித்தே பதிவுகள் எழுதினர். கடந்த இரு தசாப்தங்களாகவே ஊடகங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டிருக்கும் நிலைமையைச் சுட்டுவதாகவே அத்தகைய ஆதரவைக் கொள்ள முடியும்.

இத்தகையதொரு நிலையில், ஊடகங்கள் ஏன் தமது நம்பகத்தன்மையை இழந்து நிற்கின்றன என்பதே நம் முன்னுள்ள கேள்வி. பொதுமக்களின் நம்பிக்கையை ஊடகங்கள் இழந்து நிற்கும் நிலை ஜனநாயகத்திற்கு உகந்ததுதானா என்ற கேள்வியையும் நாம் அலசிப்பார்க்க வேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களில், ஊடகங்களைச் சீரழிவுப் பாதையில் தள்ளிய காரணிகளையும் ஆய்வு செய்யவேண்டும்.

ஊடகங்களின் வீழ்ச்சியை, அவற்றின் உள்ளிருந்து அவதானிக்க நேர்ந்த ஒரு பத்திரிகையாளனின் நோக்கில் இருந்து இக்கேள்விகளை எதிர்கொள்ளும் முயற்சியே இவ்வாய்வுரை.

Facebook event URL is https://www.facebook.com/events/1523937637914424

உங்கள் கூகுள் காலண்டரில் இந்த நிகழ்வைச் சேர்க்க
https://www.google.com/calendar/event?eid=aWVsN2ViMzRiaHA0MXZ2c2NjZ3YyMm5xM3MgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw