காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டம் – 02 .11.16

start: Nov 02, 2016 06:45PM
End: Nov 02, 2016 07:45PM

Venue: காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58,வெங்கட்நாராயணாசாலை, தி. நகர், சென்னை-17

Description: காந்தி கல்வி நிலையத்தின் இந்த வார புதன் வாசகர் வட்டத்தில்
02.11.16 அன்று மாலை 6.45 முதல் 7.45 வரை திரு பு.கார்த்திகேயன் அவர்கள் “இன்றைய காந்தி” என்ற திரு. ஜெயமோகன் அவர்களின் நூலை அறிமுகம் செய்து பேசுகிறார்.
பேச்சாளர் பற்றி:
திரு பு.கார்த்திகேயன் அவர்கள், மென்பொருள் துறையில் பணியாற்றி பின்பு தன்னுடைய குடும்பத் தொழிலான பதிப்புத் துறைக்கு வந்த இளைஞர். தீவிர வாசிப்பு ஆர்வம் உடையவர். தற்போது சென்னையில் உள்ள “சிக்ஸ்த் சென்ஸ்” பதிப்பகத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

புத்தகம் & ஆசிரியர் பற்றி:
இந்நூலின் ஆசியர் திரு.ஜெயமோகன் அவர்கள் ரப்பர், காடு, விஷ்ணுபுரம், அறம் முதல் மகாபாரதம் குறித்த வெண்முரசு வரை பல முக்கியப் படைப்புகளை தமிழுக்கு தந்தவர், தமிழில் தொடர்ந்து தீவிர வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் நிச்சயம் தேவையில்லை. இந்நூலில், காந்தி மீது வைக்கப்படும் பல்வேறு குற்றச் சாட்டுகளையும் ஐயங்களையும இந்நூலில் விரிவாக ஆராய்கிறார். காந்தியின் வாழ்க்கையையும் அவரது போராட்ட முறைகளையும் பரிசீலிக்கிறார். காந்தியம் இன்றைய சூழலுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானது என்பது போன்ற வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு திரு.ஜெயமோகன் அவர்களால் அளிக்கப்பட விரிவான பதில்களின் தொகுப்பே இந்நூல். காந்தியடிகளைப் பற்றி இப்படியொரு விரிவான ஆழமான புத்தகம் தமிழில் இது வரை வந்ததில்லை என்று சொல்லுமளவுக்கு இது ஒரு மிக முக்கிய நூலாகும்.
தொடர்புக்கு: 044-24346549 (ம) 9790740886

உங்கள் கூகுள் காலண்டரில் இந்த நிகழ்வைச் சேர்க்க
https://www.google.com/calendar/event?eid=ZWFoajNjNGk4dWllZDdrdmtmcm9yNW02M2sgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw